சர்க்கரை சீனி
அரசுக்கட்டிடத்து
மூலையில் கட்டிய
சாக்குப்பை கடந்து,
எடைக்கல் அழுத்தத்தில்
எடையிழந்து வீடு வந்த
"வைரக்கற்கள்"
திருடுபோகின்றன
அதிகம் சாப்பிட்டால்
நோய் வருமென தெரியாத
கறுப்பு எறும்புகளால்...
இப்படிக்கு,
சர்க்கரை (சீனி)
எழுத்து
ஜெகன் G