செல்வந்தனாக நூறு வழிகள்

படித்ததில் பிடித்தது.......நகரத்திலே பெருஞ்செல்வர் அவர். நல்ல செயல்களுக்கு வரி வழங்கும் ஈகை குணம் கொண்டவர். ஒரு நாள் பூங்கா ஒனறில் உலாவிக் கொண்டிருந்தார் அப்பொழுது கந்தல் ஆடை அணிந்த பிச்சைகாரன் எதிரே வாந்தான்.

பிச்சைகாரன் : ஐயா ! நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் , என் தோற்றத்தை பார்த்து என்னைப் பிச்சைக்காரன் என்று எண்ண வேண்டாம், நான் ஒரு எழுத்தாளன், புத்தகம் ஓன்று எழுதி உள்ளேன்

பெருஞ்செல்வர்: " என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய் "?

பிச்சைகாரன்:" செல்வந்தனாக நூறு வழிகள் என்ற புத்தகம் எழுதி உள்ளேன்".

பெருஞ்செல்வர்: சிரித்துக் கொண்டே"எழுத்தாளன் என்கிறாய் , செல்வனாக நூறு வழிகள் என்ற புத்தகம் எழுதி உள்ளேன் என்கிறாய் , நீ எழுதிய புத்தகத்திற்கும் உன் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லையே".

பிச்சைகாரன்: ஐயா! "செல்வனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழி"

அவனுக்கு கை நிறைய செல்வம் கொடுத்து அனுப்பினர் அந்த பெருஞ்செல்வர்

எழுதியவர் : (9-Jan-18, 8:25 pm)
பார்வை : 952

மேலே