முகவரி

முகம் தொலைத்து முகமூடியுடன் நிற்கிறேன்
முகவரி தேடி முச்சந்தியில்,
நான் யாரென அறியும் முன்னே
நாட்கள் பறக்கிறது வாழ்வினிலே!

உழைத்து உழைத்து ஓடாகி
உடம்பெல்லாம் வரிகளோடு,
ஏர் பிடித்து உழுதவனும்
ஏக்கத்துடன் தேடுகிறான் முகவரியை.

கற்ற கல்விக்கு வேலையில்லையென,
கடல் கடந்து உறவுகளைப் பிரிந்து,
சுடும் மணலிலும் உறையும் குளிரிலும்,
நித்தமும் தேடுகிறான் முகவரியை.

வன்கொடுமை ஆனவக்கொலையென தன்,
சுயமிழந்து சுதந்திரமிழந்து
முகவரி தேடுகிறது பெண்ணினம்.

சோகம் ததும்பும் முக வரிகளுடன்
முகவரியைப் பறிகொடுத்து விட்டு,
முடங்கிக் கிடக்கிறார்கள்
முதியோர் இல்லத்தில்
முகவரியைத் தேடி.

நிரந்தரமில்லா உலக வாழ்க்கையில்,
நிமிடத்திற்கு கொரு முகமூடி,
எனக்கான முகவரியை எங்கு தேடுவேன்?.

எழுதியவர் : ஒப்பிலான்.மு.பாலு (12-Jan-18, 9:56 pm)
சேர்த்தது : முபாலு
Tanglish : mugavari
பார்வை : 50

மேலே