கனவுகள்

காட்சிகளின் வழியே கனவுகள் ஆயிரம் கோடி,
காலத்துக்கேற்றவாறு மாறும் சிந்தனைகள் பலகோடி,
கண்ணுக்குள் விளையும் கனவுகள் கோடி,
காதல் வந்துவிட்டால் கனவுகள் பலகோடி,

நிறைவேறாக் கனவுகள் குவிந்து கிடக்கு,
நித்தம் அதனளவு அதிகரித்து போகுது,
நியாயமான கனவுகள் நிராகரித்துப் போகையில்
நிம்மதியான வாழ்வு கானல் நீராய் மாறுது.

கற்பனை உலகில் கனவுகள் இலவசம்,
காட்சிகள் மாறும் நினைவுகள் நிறைவேறும்,
அரண்மனை தோன்றும் அரியணை இருக்கும்,
அமைச்சர்கள் புடைசூழ அரசனாக நானினிருக்க,
அழகுப் பெண்ணொருத்தி ராணியாக அமர்ந்திருக்க,
அழகு சேடிகள் சாமரம் வீச,
அண்டை நாட்டு அரசர்கள் காலடியில் கப்பம் கட்ட,
காணும் கனவுகள் சொர்க்கம்.

கற்பனை உலகில் காவிய கதாநாயகர்கள்,
கடவுளிடம் கைகுலுக்கும் கதாபாத்திரங்கள்,
நிகழ் உலகில் தோற்றுப்போன வீதியோர நாயகர்கள்,
நிம்மதி தேடியலையும் நிற்கதியற்றவர்கள்,

கனவுகளே எங்களை வாழ வைக்கிறது,
கனவுகள் மகிழ்ச்சி கொடுக்கிறது,
கனவுகளுடன் நிராசையாக வாழ்வு நகர்கிறது,
கற்பனை உலகில் கனவுகள் சொர்க்கம்.

எழுதியவர் : ஒப்பிலான்.மு.பாலு (12-Jan-18, 9:58 pm)
சேர்த்தது : முபாலு
Tanglish : kanavugal
பார்வை : 79

மேலே