துணுக்கு 2

வாழ்நாளை காதலித்துக் கொண்டே
இருக்கின்றவர்களிடம் கேட்டால்
சொல்லிவிடுவார்கள் ,
குளிர்காலத்தில்,
புளித்த ஆரஞ்சு சாப்பிடும் ருசி
எப்படி இருக்கும் என்று
===============================

பொழுதுப்போக்கையும் வாழ்க்கையையும்
சரியாக பிரித்துப்பார்க்கத்
தெரிந்துகொண்டாலே போதும்
எவ்விதமான ஈர்ப்புகளையும்
இது ஜஸ்ட் டஸ்ட்தான் என்று தட்டிக்கடக்க
========================================

பாலியக்கால புகைப்படத்தில்
அவன் வலது கன்னத்திற்குமேல்
மச்சமிருப்பதைப் பார்த்துவிட்டு,
அங்கே வந்துபோகும்
தாடிமீசைகளை அகழ்வாராய்கிறாள்,
இவன்களில் ஒருத்தன்கூட
அவனாகிவிடக் கூடாதே என்று,
விலைமகள்தான் என்றாலும்
விற்பனைக்கில்லை அவள் காதல்
======================================

எழுதியவர் : அனுசரன் (13-Jan-18, 1:35 am)
பார்வை : 40
மேலே