காத்திருக்கும் காதலன்

எனக்கு அவளை பிடிக்கும் - ஆனால்
என் மனதை முழுதுமாய் வெளிப்படுத்த
என் இலக்கு என்னை தடுக்கிறது ,
எனக்கு அவளிடம் பேச ஆயிரமுண்டு
என்ன அதனை பேச வார்தைதானில்லை !

காலமுண்டு கவலைவேண்டாம் ,
கலிப்பான மன ஒப்பந்த நாளன்று - அவள்
கலைத்தாலும் கண்ணயர்ந்தாலும்
கடிகார நேரம் பாராது பேசுவேன் என்று ,
கவலைவிட்டு கடைமையை செய்ய வேண்டும்
கடந்திடும் காலம்
கைசேரும் காதல் வரம் !

நான் பேச நினைக்கிறன்,
நேரம் கிடைக்கின்றது - ஆனால்
நாளைய எண்ணங்களினால் - இன்று
நகர்த்துகிறேன் உன்னிடம் பேசாது !
நினைத்திருப்பாய் மறந்தேன் எனவே தான்
நொடிகூட அழைக்கவில்லை என்று - ஆனால்
நான் மறக்கவில்லை
நம் வாழ்வை நினைத்திருக்கிறேன் !
நீ புரிந்து கொள்ள விரும்புகிறேன்
நான் வெளிப்படுத்தி சொல்லாமலே !
நிமிடங்கள் சில என்னை வருத்தினால்
நண்பர்களுடன் நடைபயனம்கொள்கிறேன் !
நித்தமும் உன் நினைவு என்னை தட்டி அழைக்க ,
நெருங்காதே சில காலம்
நீங்கியிரு என்று என்னை நானே அமர்த்துகிறன் !
நீ வருத்தமடையாதிருக்க
நொடி பொழுதில் ஒரு வார்த்தை பேசி
நேரமில்லையென்று விரைவாய் துண்டித்து செல்கிறேன் !

உன் மனம் நானறிவேன் - ஆனால்
உண்மையில் என் மனம் நீ அறிவதில்லை ,
உன்னை எண்ணி வருந்துகிறேன் - தினமும்
உனக்காக வேண்டுதல் செய்கிறேன் !
உனதருகிலிருக்கும் வண்ணம் நினைவு வந்தாலும்
உன்னிடம் மறைக்கிறேன் !

அங்கே உன் மனமும் செயலும் அறிய
அகம் என்னை தட்டும் - ஆனால்
அழைக்காது காத்திருப்பேன்
அன்றாட உன் விடுக்கைகாக !
அனுப்பினத்தை கண்டதும்
அகம் லேசாகும் - மறு விடுக்கை
அனுப்பமாட்டேன் நீ எதிர்பார்ப்பதை
அறிந்தும் - சில நேரம்
அனுப்பிடாது நீ கோபம் கொள்கையில்
அடக்கயியலாது அழைத்திடுவேன் - உன்
அகத்தின் கோபம் போக்க !

என்றும் நான் உனக்கே
ஏற்ற காலம் வரும்வரையில்
என்னை புரிந்து கொள்ளடி .........................!

எழுதியவர் : ச.அருள் (13-Jan-18, 4:57 pm)
பார்வை : 284

மேலே