காகிதப் பட்டம்
நான் காகிதத்தில் செய்த
பட்டமது அதோ வானிலே
பறந்து கொண்டிருக்கு ஓர்
பறவைபோல -காகிதப் பறவை
காற்று அடிக்கும் வரை
பறக்கும்; பாதையில்
தடை ஏதும் இல்லை எனில்
பறந்துகொண்டே இருக்கும்
நான் விடுத்த காற்றாடி
என் சிந்தனையை சற்று
அசைத்தது காற்றாடி பயணம்
நான் செய்த காற்றாடி ஓர் பொருளே
அதை அசைக்கும் காற்று அதன்
உயிர் மூச்சு , மூச்சு உள்ளவரை
காகித காற்றாடிக்கும்!
இதோ எந்தன் இந்த உடல்
இதுவும் அந்த பட்டம் போல்
ஓர் திடப் பொருளே -அதற்கு
மூச்சாய் இருந்து உயிர் தந்து
நடத்தி செல்கிறான் படைத்தவனொருவன் !
உயிர் மூச்சு நின்றால் இந்த
உடலுக்கும் சலனம் ஏதும் இல்லையே!
காற்று நின்றுபோன பின்னே
கீழே வீழ்ந்திடும் அந்த
காகித பட்டம்போல் !
i