தைப்பொங்கல் வாழ்த்து

ஆயிரம் கையுடயான் கண்ணீர்
உழவர் தைத்திரு நாள் இதுவே

கால நேரம் பார்க்காமல்
உழைத்திடும் இவர்களுக்காய்
நன்றி சொல்லிட நம்மவர்
தந்த நாள் இதுவே

புத்தாடை உடுத்தி
புதுப் பானை அடுக்கி
புத்தரிசி பொங்கலிட்டு
கொண்டாடிடும் நாள் இதுவே

அறுவடையின் ஒளியரசனுக்காய்
பொங்கி வழியும் பொங்கலதை
தலை வாழையிலை இட்டு பரப்பி
படைத்திடும் நாள் இதுவே

ஒரு சாண் வயிற்றுக்காய்
ஓடி ஓடி உழைக்கும் கரங்களில்
அள்ளி அள்ளி அன்னமிடும்
கரங்களை மறவாது நாம் எண்ணி
கை கூப்பி நன்றி நவிலும்
நல்லதொரு நாளும் இதுவே

“” எழுத்து“” தள நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

சஜா வவுனியா
+94783998525

எழுதியவர் : saja (14-Jan-18, 4:31 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 64

மேலே