விண்ணுலகம் போற்றும் வியந்து

தொண்டினை நாள்தோறும் தொய்விலாது செய்வோர்தாம்
கொண்டதை யெல்லாம் கொடுப்பரே - மண்ணுலகில்
எண்டிசை யெங்கிலும் ஏற்றம் அடைவோரை
விண்ணுலகம் போற்றும் வியந்து
---------------------------
உண்மையை பேச உயர்வு கிடைத்திடும்
உண்மையால் வாய்மையும் ஓங்கிடும் - மண்ணுலகில்
பண்பிற் சிறந்த பணிவான மக்களை
விண்ணுலகம் போற்றும் வியந்து
---------------------------
மண்ணிற் பிறந்து வளர்ந்த அழகிய
கண்ணழகி யைக்கண்டு காதலுற்றேன் - கண்ணழகுப்
பெண்மேல்நான் கொண்ட பிரியாத காதலை
விண்ணுலகம் போற்றும் வியந்து
---------------------------
மண்ணிற் சிறந்த மதியுடைய மக்களும்
பெண்குலத்தைப் போற்றியேப் பேணிடுவர் - பெண்களைக்
கண்ணென யெண்ணி கருதுகின்ற நல்லோரை
விண்ணுலகம் போற்றும் வியந்து
---------------------------
வெண்மதி போலவே வெண்ணிறம் கொண்டவள்
வண்மை நிறைந்த வடிவழகாள் - பெண்ணழகை
மண்மீது வாழும் மனிதர்கள் மட்டுமின்றி
விண்ணுலகம் போற்றும் வியந்து
---------------------------
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:25 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 258

மேலே