அசைந்து வருகிறாள் பொங்கல் கலமேந்தி தை மங்கை அவள்
தை தை
தக்க தை
அக்க தை
தை தக்
தை தை
தை தக்
என்று ஜதி போட்டு
அசைந்து அசைந்து
ஆடி வருகிறாள்
வசந்தத்தில் தை மங்கை
மங்கை அவள் வண்ண கைகளில்
புதுப் பானை ஏந்தி வருகிறாள்
மங்கை, அதில் புது அரிசி
பாசி பருப்பு வெல்லம் சேர்த்து
முந்திரி, ஏலம் லவங்கம் கூட்டி
முற்றத்திலே ஏற்றிவைத்த விறகடுப்பில்
கலையத்தில் பாலும் சேர்த்து
அது பொங்கி வழியும்போது
வீட்டில் உள்ளார் எல்லாரும்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
என்று ஒரே குரலில் கூவி
கதிரவனுக்கு மங்கை தந்த
பானை பொங்கலை படைத்து
பின்னர் அதை உண்டு களிக்க,
தை மங்கையே நீ வழி செய்தாய்
நீ வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
ஒவ்வோராண்டும் தை திங்கள் முதல் நாளில்
இவ்வாறே ஆடி ஆடி வா எங்களுடன்
இந்த தமிழர் திருநாளை தனி நாளை
இனிதே கொண்டாட மண்ணிற்கு
பருவம் தவறாது மழை பொழிந்து
உழவர் பெருமக்கள் உள்ளத்தில்
மகிழ்ச்சியாம் பொங்கல் பொங்க
நீ வந்திடவேண்டும் தை பெண்ணே
நீ எங்கள் தெய்வத்தாய் நீ வாழியவே
வாழியவே என்று மீண்டும் வாழ்த்துகின்றோம்