ஞாநி

நிறம் மாறாமல்
அறம் மீறாமல்
நின்றான் – இன்று
சென்றான்.

தலை குனியாமல்
அடிபணியாமல்
விலை சரியாமல்
நிலை முறியாமல்
மனிதம் நிமிர்த்த
மனிதன்.

துறைகள் தோறும்
தொட்டான் உச்சம்
கறைகள் இல்லாத
வாழ்க்கை மிச்சம்.
எதற்கும் எவனுக்கும்
இல்லை எச்சம்.
வாழ்ந்தான் என்ற
வாழ்க்கைக்கு அர்த்தம்.

அறிவும் உழைப்பும்
அடுத்தவர்க்காக
உடலும் கொடுத்தான்
பிறருக்காக.

மனிதனாய் மறைந்த
மனிதனே வணக்கம்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (15-Jan-18, 2:25 pm)
பார்வை : 79

மேலே