அன்பென்றாலே அப்படித்தான்

அன்பென்றாலே அப்படித்தான்...

புரிந்துகொள்ள முடியா இன்பம் தரும்...

காதுகள் இரண்டும் அக்குரலின் ஓசையைத் தேடும்...

கண்களின் தேடலெல்லாம் அந்த பிம்பத்தை நோக்கியே இருக்கும்....

கூட்டம் சூழ இருந்தாலும் அந்த இருப்பை உணர மனம் அலைபாயும்...

நினைவுகள் எல்லாம் காட்சிகளாக நடமாடும்...

இதயம் அதன் ஆழத்தில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும்...

தோற்கடிக்க மனம் வராது; தோற்றுப்போவதில் என்னவோ அப்படி ஒரு சந்தோசம்...

வார்த்தைகளின் வலியை மறப்பதே சுகமான அனுபவம்...

வாங்கிய திட்டுகள் எல்லாம் வாழ்வின் வெற்றியாகிப்போனது நிகழ்ந்து கொண்டிருக்கும் வினோதம்...

சத்தமெல்லாம் ஓசையில்லா ஒலியினை எழுப்பிக் கொண்டெயிருப்பது அற்புதம்...

ஆம், அன்பென்றாலே அப்படித்தான்...

எழுதியவர் : ஜான் (18-Jan-18, 8:02 pm)
பார்வை : 123

மேலே