ஆன்மீக அரசியல் கட்சி

மகனே நானும் பல அரசியல் கட்சிகளிலே உழைச்சேன். என்னோட உழைப்புக்குத் தகுந்த பதவி கெடைக்கல. புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சா என்னன்னு தோனுது. நீ என்னப்பா சொல்லற?
😊😊😊😊😊😊
நல்லதுப்பா. நம்ம மக்களில் 99% கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. அவுங்கள கவர்வதும் நம்ப வைப்பதும் நம்பிக்கையைப் பெறுவதும் எளிதான செயல். அதனாலதான் நாட்டில போலிச் சாமியார்களும் மந்திரவாதிகளும் கொடிகட்டிப் பறக்கறாங்க. அதனால நீங்க மதம், கடவுள் பேரச் சொல்லி ஒரு கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் 2019ல் தமிழக முதல்வர்.
😊😊😊😊😊😊
நீ சொல்லறது சரின்னு தோனுது. நீயே கட்சியோட பேரச் சொல்லுடா மகனே. நாமே உடனே பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணி நாம கட்சி துவக்கிறத அறிவிச்சிடலாம்.
😊😊😊😊😊😊
அப்பா, நம்ம கட்சிப் பேரு ஆன்மீக அரசியல் கட்சி ( ஆ.அ.க). ஆன்மீகம் பொதுவான சொல். எல்லா மதத்தைச் சேர்ந்தவங்களும் நம்ம ஆன்மீக அரசியல் கட்சிக்குத்தான் வாக்களிப்பாங்க. மத்த கட்சிங்களுக்கு எல்லாத் தொகுதிலயும் நோட்டா வாக்குகளைவிட குறைவாத்தான் கிடைக்கும். நீங்க தான் முதல்வர். எனக்கென்ன பரிசு தருவீங்க?
😊😊😊😊😊😊😊
நீதான்டா மகனே துணை முதல்வர்.
😊😊😊😊😊
அது போதும்பா எனக்கு. தமிழக மக்கள ஆட்டி வச்சிடலாம். சரி நேரம் ஆகுது. நான் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யறேன். நீங்க தலைமுடிக்கு மையடிச்சு குளிச்சிட்டுத் தயரா இருங்க.

எழுதியவர் : மலர் (20-Jan-18, 10:12 am)
பார்வை : 252

மேலே