நான் ரசித்தக் காதல்
யாரும் இல்லா வேளை அது
நானும் எந்தன் தனிமையும்
கைக் கோர்த்து நீளும் சாலை ஓரம் நடவையில் என் கண்கள் அதுவரைக்
காணாத காதல் காட்சி அது...!
ஆதவனும் கதிர் கையுர்த்தி எழுகையில்
மார்கழி மாத பனியவள்
அவனைக் கட்டித் தழுவிடுகையில்
சூடும் சூரியனும் ஒளிர் குளிர்
நிலவென ஆகிப் போக..!
வெட்கத்தில் அவன் முகமும்
செக்க சிவந்திட அவன் தழுவலில்
அவள் கானலாய் கரைந்தால்...!