திருமணத் தடை நீக்கும் திருமருகல் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலத்திலிருந்து 15 கி. மீ. தொலைவிலுள்ள ஊர் திருமருகல் ஆகும். ஊர் முழுவதும் மருகல் என்னும் வகை வாழை மரங்கள் நிறைந்து காணப்படுவதால், ஊருக்கும் அப்பெயரே வழங்கப்பட்டது.

மதுரையில் வாழ்ந்த ஒரு செட்டியாருக்கு ஏழு மகள்கள் இருந்தனர். அவர் தம் மு°த்த மகளை தம் மருமகனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து, பின் ஒரு பணக்கார வரன் வந்தவுடன் தம் மருமகனிடம் தம்முடைய இரண்டாவது மகளை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து, மு°த்த மகளை பணக்கார வரனுக்கு மணமுடித்து விட்டார். இவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றனாக மருமகனுக்கு பொய் வாக்களித்து தம்முடைய ஆறு மகள்களையும் வேறு பணக்கார பிள்ளைகளுக்கு மணமுடித்து விட்டார்.

அவரின் ஏழாவது மகள் இனியும் தன் தந்தையால் தன் மாமன் ஏமாற்றப்படக் கூடாததென்றெண்ணி, ஒரு நாள் தன்னுடைய மாமனை மணம் முடிக்க எண்ணி அவருடன் ஊரிலிருந்தே ஓடி விட்டாள். மதுரையிலிருந்து அவர்கள் இருவரும் தப்பி இரவு திருமருகல் வந்தடைந்தனர். இரவில் கோயில் மண்டபத்திலேயே தங்கி காலையில் திருமருகலில் வீற்றிருக்கும் மாணிக்கவன்னரின்(இரத்தினகிரீஸ்வரர்) முன்னிலையில் திருமணம் செய்துக் கொள்ள எண்ணினர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவள் மாமன் பாம்பால் தீண்டப்பட்டு இறந்து விட்டான். ஊரைவிட்டு தப்பி ஓடி வந்த அவளுக்குத் தன் மாமனின் இறப்பு பெருந்துயரம் அளித்தது. அப்போது சிவத் தொண்டு புரிவதற்காக, ஏழு வயது நிரம்பிய, சீர்காழி மாநகரில் தோன்றிய மன்னரனான திருஞானசம்பந்த பெருமான், திருமருகல் வந்திருந்தார்.

அவர் வரும் வழியில் பெருந்துயரத்தால் வாடி வதங்கிய அப்பெண் தென்பட்டால். அவளின் துயரத்திற்கான காரணத்தினை கேட்டறிந்த பெருமானார் இறைவனிடம் தம் தேவாரப் பாடலால் மன்றாடி, அவளின் மாமனின் உயிரை மீட்டார்.

திருஞானசம்பந்த பெருமானின் தேவாரப் பாடலுக்கு அகமகிழ்ந்து அச்செட்டி பையனை உயிர் மீட்ட சிவனார் திருஞானசம்பந்த பெருமானிடம், "சம்பந்தா! உயிர் இழந்த இந்த ஆண்மகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தமையால் நீயே இந்நொடி முதல் இவன் தந்தையாவாய். ஆதலால், பொழுது விடிந்தவுடன் நீயே உன் மகனுக்கும் மருமகளுக்கும் இத்திருக்கோயிலின் வன்னி மரத்தை சாட்சியாக வைத்து மணமுடித்து வை!" என்றார். திருஞானசம்பந்தரும் அவ்வாறே செய்தார்.

ஆதலால், ஒருவரின் பிறப்புக் குறிப்பில்(ஜாதகத்தில்) எத்தகைய திருமணத் தடை இருப்பினும், இத்திருக்கோயிலுக்குச் சென்று வணங்கினால் அத்தடை நீங்கி விடும். திருமணத் தடை நீக்கும் திருக்கோயில் திருமருகல் மாணிக்கவன்னர் திருக்கோயிலாகும்!

எழுதியவர் : Yaazhini Kuzhalini (21-Jan-18, 12:19 pm)
சேர்த்தது : Yaazhini Kuzhalini
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே