பொய், பொய், பொய்

(ஆசிரியப்பா)

எப்பொருள் யார்யார் வாய்கேழ்ப் பினுமப்
பொருள்மெய்ப் பொருள்காண் பதறிவு என்றார்
தப்பில் லையிது தப்பா துண்மையே
இப்படி நம்சரித் திரம்பரங் கியெழுதத்
தப்பாம் மவன்ஊ கமேத்திரா விடமாம்
அப்படிப் படித்தவர் மனோன்மணி சுந்திரம் (இலங்கைப் பிள்ளை)
ஒப்பியே சரித்திரம் படித்தார் அண்ணா
முன்னவர் பாட்டில் சேர்த்தார் திராவிடம்
பின்னவர் நாட்டையே திராவிட மாக்கினார்
ஏட்டுச் சுரையையண் ணாக்கறி யாக்கினார்
தட்டாப் பெரியா ரிடமும் சொன்னார்
பின்தமிழ் நாட்டைத் திராவிடம் உலுக்கிட
சுந்திரம் தமிழ்த்தாய் வாழ்த்தில் நுழைத்தார்
தமிழரை உலுக்கிய துஊகம்
தமிழெனும் அமிழ்துபாழ் ஊகத் தாலே!

நம்சரித் திரம்நம் மவர்எழு தச்சரி
நம்சரித் திரம்முன் னோர்எழு தச்சரி
நம்நாட் டையகழ் வுசெய்தெழு தச்சரி
முந்நூ றாண்டுமுன் ஆங்கிலர் வந்தார்
தன்னூ ருவிட்டு இந்தியா விலாய்ந்தார்
சிந்தைநூற் றைம்பதாண் டுமுன்னே அகழ்ந்தார்
சிந்துமக் களாரியர்க் குதிரா விடராம்
சிந்துதி ராவிடர் என்பது ஊகம்
சிந்தெழுத் துதமிழ் வங்கம் மணிபூர் மபி
காந்தா ரெழுத்துபோல் என்றான் ஊகம்
அங்கெல் லாம்திரா விடர்பர வினராம்
எங்குமி லாஆ தாரமற் றஊகம்
தங்கத் தமிழ் கெட்டது
சங்கத் தமிழை யழித்தார் உண்மையே!

--- ராஜப் பழம் நீ
(21.1.2018)

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jan-18, 7:04 pm)
பார்வை : 538

மேலே