கள்ளிக்காட்டு காவியம்

ஆ:ஏன்டி கருவாச்சி
இது நியாமா
இருக்கா மனசாட்சி
கொஞ்சம் கூறமா
நீ பாத்ததும்
பறிச்சிட்ட கண்ண
ஓன் நெனப்பென்ன
மெல்லமெல்ல தின்ன
என்மனசுல தூவுறிய மண்ண
வாழ்நாளெல்லாம்
வருவேன்னு ஏன்டு சொன்ன

பெ:காதலெனும் ஊரை சேர
காட்டுவழி வந்தேன்
காலில் ஒரு முள்ளு தைக்க
மாட்டிக்கிட்டு நின்னேன்

ஆ: முள்ளு தைச்ச காயம் ஆத்த
முத்தம் ஓன்னு தந்தேன்
முத்தத்துக்கும் ஆறலனு
மொத்தத்தையும் தந்தேன்

பெ:அடிபானை சோத்தப்போல
அப்பியிருக்குது
ஓன் நெனப்பு
விடியாத வீட்டுக்குள்ள
தப்பிபொறந்தது
என் பொறப்பு

ஆ:அடியாாருக்கு இல்லடி சோகம்
அத ஆத்திட வந்தது காலம்
நாம கைகள
கோத்திடும் நேரம்
கவலைகள் காத்துல ஓடும்
ஓன் மனசோட எனை சேத்து
சொமப்பேன் பாரம்.....

ஆ:வெள்ளாமைய
அள்ளுவேன்னு
நட்டுவெச்சேன் நாத்தா
வெள்ளம் வந்து
மூழ்குமுன் னு
கனவில் யாரு பாத்தா

பெ: போட்டாவுக்கு
பொட்டு வைக்க
காத்திருக்கா ஆத்தா
சீக்கு வந்து அப்பன் கெடக்க
காதல் ஒரு சோக்கா

ஆ:அடியேஅடி கடலகாடு
காணாம காய் காய்க்கும்
அதுபோல காதல்தான்டி
அறியாம பாதம் வைக்கும்

பெ:நான் காதலனை
குத்தம் சொல்ல வில்ல
அட காதல குத்தம்
சொல்லும் புள்ள
வேற பொண்ணா
ஒலகத்தில் இல்ல
என் அப்பனுக்கு
நான் ஓரே புள்ள
அவர் ஊசுரோட விளையாட
துணிச்சல் இல்ல

பெ:ஏன்டா கருவாயா
இது பாவமா
காயம் மறைஞ்சாலும்
வடு மாறுமா
அடுத்த சென்மம்
ஓன்னு இருந்தா
என் அப்பனுக்கு
நல்ல உசுர் இருந்தா
நம்ம காதல சேத்து வைப்பான்
அவர் தோளுல
நம்ம புள்ள நிப்பான்
உனைதூக்கி எனை தூக்கி
உலகம் பறப்பான்....

எழுதியவர் : விமுகா (23-Jan-18, 9:11 am)
சேர்த்தது : விமுகா
பார்வை : 153

மேலே