உயிர்பொம்மை

பளிச்சிடும் பட்டாடை உடுத்தி

பளபளவெனும் நகைகள் பூட்டி

புன்முறுவல் முகத்தோடு

போஸ் கொடுக்கும்

ஜவுளிகடை பொம்மை

காட்சிபடுத்துகிறது....

என் கிராமத்தில்

காப்பி ஏந்திய கையோடு

காத்துக்கொண்டிருக்கும்

மூப்பு எய்திய முதிற்கன்னியை.....

எழுதியவர் : விமுகா (23-Jan-18, 6:19 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 149

மேலே