அம்மா அவள் ஒரு தியாகி

அந்தப் பத்து மாதங்கள்
உன் கருவறையில் பக்குவமாய்
எனைச் சுமந்தாய்
வலி தாங்கி எனை ஈன்றாய்
வார்த்தையில்லை விபரிக்க
ஊன் உறக்கம் தாெலைத்து
உயிராக எனை வளர்த்தாய்
வலியும் வேதனையும் சுமந்தாய்
வேண்டாத தெய்வம் ஏதுமில்லை எனக்காக
கையேந்தி நின்றாய் நலமுடன் நான் வாழ
கண்கலங்கி நீ நிற்பாய் சற்று நேரம் பிந்தி விட்டால்
வாசல் வந்து வழியனுப்பி
முத்தமிட்டு முதுகு தடவி
நேரத்துக்குச் சாப்பிடென்று
பசித்திருப்பாய் உனை மறந்து
அத்தனை வேலையும்
அலுப்பின்றி முடித்து விட்டு
வாசலில் காத்திருப்பாய்
கால் கடுப்பும் தெரியாது
வியர்த்திருக்கும் என் முகத்தை
ஒரு தரம் தடவி விட்டாலே
ஓடிப் பாேகும் அத்தனை சாேர்வும்
படுத்துறங்கும் வரை விழி மூடா தெய்வமாய்
தூக்கம் தாெலைப்பாய்
அசதி மறந்து தலை காேதி
தட்டி தடவி
பல கனவாேடு இமைகள் நீ மூடி
நிம்மதியாய் நீ தூங்க கனவிலும் கூட
பதறி எழுந்து துடித்திருப்பாய்
இவை எல்லாம் எனக்காய் நீ செய்தாய்
நான் என் செய்வேன் உனக்கு
ஈடாக ஒன்று சாெல்லிவிடு தாயே
தாய் என்ற வார்த்தைக்கு
தியாகம் தான் மறு பெயராே

எழுதியவர் : அபி றாெஸ்னி (26-Jan-18, 7:48 am)
பார்வை : 411

மேலே