தீயனவே செய்திடினும் ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மூதுரை 30

நேரிசை வெண்பா

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம். 30 – மூதுரை

பொருளுரை:

மரங்கள் தம்மை மனிதர் வெட்டும் அளவிற்குத் தகுந்தாற் போல அவர்களுக்கும் குளிர்ந்த நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும்.

அது போல, கற்றறிந்த அறிவு உடையவர்கள் தாங்கள் இறக்கும் வரை பிறர் தமக்குத் தீங்குகளையே செய்தாலும் தாம் அவர்களையும் தம்மால் ஆகுமளவும் காப்பார்கள்.

கருத்து:

அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-18, 9:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே