ஒருவற்குச் செய்த நன்றி என்று தருங்கொல் என வேண்டாம் – மூதுரை 1

நேரிசை வெண்பா

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1 - மூதுரை

பொருளுரை: நிலையாக இருந்து தளர்வடையாமல் வளரும் தென்னை தன் வேர்களால் உண்ட தண்ணீரை உட்கொண்டு தானாகவே தன் உச்சியில் உள்ள கிளைகளில் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருகிறது.

நற்குணமுடைய ஒருவனுக்கு உதவி செய்தால் அவ்வுதவியை அவன் எப்பொழுது திரும்பச் செய்வானோ என்று எதிர்பார்க்க வேண்டாம். தேவையான பொழுது அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-18, 10:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே