போராட்டம்

விழுந்த தடங்களை
விதி என்று சொல்வேனா?..
விழுத்தி மிதித்தவர்களின்
மதி என்று சொல்வேனா?
இன்று போகட்டும்
நாளைவரும்
இது மட்டும்தான்
என் தாரகமந்திரமாய்..என்னால்
ஓய்ந்து போக முடியாது
நேற்றைய தோல்விகளின்
கேள்விகளுக்கு
நாளையாவது
பதில் கிடைக்கட்டும்
அதற்குதான்
இத்தனை போராட்டம்

எழுதியவர் : இவள் நிலா (27-Jan-18, 9:28 pm)
Tanglish : porattam
பார்வை : 86

மேலே