வஞ்சிப்பா

இனசனங்களி னிதழ்மொழிவழி
சினமதுவர வழிவகுத்திடும்.
தினந்தினம்பெருந் துயரரும்பிட
மனதினிலெழுங் கலவரநிலை
யாவும்
மின்னல் வேகம் விட்டே மறைந்திட
கன்னல் அன்பு காட்டு!
உறவால் வாழ்வில் ஒளிதோன் றிடுமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Jan-18, 9:56 am)
பார்வை : 76

மேலே