ஆள போறான் தமிழன்

தீர்க்கமான முடிவு
தமிழன் நாடாளும் நாள்
வெகு விரைவில்
சந்தேகமேயில்லை

இங்கு நடக்கும் போராட்டங்களும்
பொதுக் கூட்டங்களும்
போட்டி பொறாமை எண்ணங்களும்
காட்டிக் கொடுக்கிறதே
தமிழன் ஆள போகிறான் என ,

ஒவ்வொரு தமிழனின் விழிகளிலும்
ஆனந்தக் கண்ணீர்
பொங்கிக் குமுறும் மக்கள்
புன்னகை பூக்கும் நாள் வெகு விரைவில்

பொறுத்தார் பூமியாள்வார்
இந்த உண்மை புரியும் நாள்
வந்து கொண்டே இருக்கிறது
நம்பு இது உண்மை ,இது நிஜம் ,

தமிழர் என்ற உரிமையும் ,
நமக்கு நாமே என்கின்ற அசைக்க முடியா நம்பிக்கையும்
தமிழன் என்ற திமிரும், தரணி ஆளும் பெருமையும்
நமக்கே நமக்கு தமிழா /அஞ்சாதே

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை
துணிந்து விடு ஓன்றுபடு
உனக்கிடையே இடைவெளி வேண்டாம்
யாம் இறுக்கப் பற்றுவோம் கரங்களை

தமிழன் நாடாளும் நாள் வெகு விரைவில்
ஆள போறான் தமிழன் ,கேட்கிறது காதில்
தமிழன் நாடாளும் நாள் வெகு விரைவில்
உன் கண்ணீர் யாவும் புன்னகையாய் மாறிட
ஆள போறான் தமிழன்

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Jan-18, 12:10 pm)
பார்வை : 197

மேலே