ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை 5

நேரிசை வெண்பா

அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5 – மூதுரை

பொருளுரை:

நன்கு கிளைத்து வளர்ந்த தோற்றத்தால் நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் பழுக்கும் பருவம் வராமல் பழங்கள் பழுக்காது;

அதுபோல, அடுத்து அடுத்து முயற்சி செய்தாலும் நடைபெற்று முடியும் காலம் வந்தாலன்றி மேற்கொண்ட காரியங்கள் முடியாதாம்.

எனவே, எந்தச் செயலும் காலம் அறிந்து தொடங்க வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-18, 4:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே