உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் - மூதுரை 6

நேரிசை வெண்பா

உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6 - மூதுரை

பொருளுரை:

கருங்கல் தூண் பெரிய பாரத்தைச் சுமந்தால் பிளந்து முறியுமே அல்லாமல் தான் தளர்வுற்று வளையாது;

அதுபோல, தங்களுக்கு மானக்கேடு ஏற்பட்டால் தம் உயிரையும் விடும் குணமுடையவர்கள் பகை வரை பார்த்து பணிந்து வணங்குவார்களா? வணங்க மாட்டார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-18, 4:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே