மீண்டும் ஒரு காதல்

அன்பே
புன் பட்ட
என் இதயம் இது!
இதில் இனி
உன் போன்று இன்னொறு
புன்னகையைத் தாங்குமா?!!,

காயங்களை கற்ற
கலைக்கூடம் இது
உன் கண் அடியைத் தாங்குமா?!,

சிதைந்து கிடக்கும்
சிந்தனை இதில்
இன்னொறு சித்திரம்
பதிக்க முடியுமா?!,

தேய்ந்து போன
பாதை இதை
இனி தேர் ஒன்று
தேடி வருமா?!,

மங்கிப்போன
இமை இது இன்னொறு
"மை விழியை" கோர்குமா?!,

வெறுக்கப் பட்ட வேதனை
இதில்
இதயம் ஒன்று விரும்பி வர
வழி பிறக்குமா?!,

கனவுகள் இல்லாத
உறக்கம் இது
உலா போ(மோ)க
உடன் வருமா?!,

ஈரம் கொண்ட
இதயம் இதில்
வேர் ஒன்று ஊன்ற
வழி இருக்குமா?!,

மீள முடியாத
மின் காந்த தூண்டலில்
மிதந்து வரும் இவ்வுள்ளத்தில்!
"மீண்டும் ஒரு காதல்"
மெதுவாக மெல்லிசை பாட
உதிரங்கள் ஒத்துழைக்குமா?!
உயிரே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-Jan-18, 6:37 pm)
Tanglish : meendum oru kaadhal
பார்வை : 689

மேலே