காத்திருப்பு...

காத்திருப்பு.....
கண்களாலும் பேசவில்லை காணும் திசையிலும் நிற்கவில்லை
காத்திருப்பதாய் உணர்த்திட நீ காத்திருந்தும் களைத்ததில்லை
இருந்தும் என்னுள் எறும்பாய் தினம் ஊறி இதயத்தை கறைத்தாய் சம்மதம் என்பதை ஜாடையில் உணர்த்திட...
சகஜமாய் அருகில் வந்து சமமாய் நடந்தாய்
எண்ணுறவே உயர்வேன்றாய்
உலகமே என்னில் என்றாய்
உடலால் மட்டுமே வேறுபட்டு
உறக்கம் தொலைத்து
கனவுகளில் வாழ்ந்து வந்தேன்
காலம் செய்த கோலத்தினால்
கரை சேரா கனவாகவே போனது நம் மணக்கோலம்..
இருந்தும் மனதால் மாலையிட்ட
உன்னை விடுத்து
எப்படி ஏர்பேன் வேறோரு உறவை
காலம் கனியும் வரை காத்திருப்பேன்
உன் கை கோர்க்க...

எழுதியவர் : அனிதா (29-Jan-18, 11:18 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : kaathiruppu
பார்வை : 149

மேலே