மழலை உள்ளம் ---நிலைமண்டில ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா :

சுதந்திர தாகம் :
============

தணியா துளத்தினில் தணலாய்ப் பொங்கியே
பிணியாய் வாட்டிடும் பெண்ணடி மைத்தனம்
சாதி மறந்துயர் சமத்துவங் கண்டிடுங்
காதலால் நடந்திடுங் கௌரவக் கொலைதனைச்
சுட்டெரித் திடனுஞ் சுதந்திர தாகமே...


மழலை உள்ளம் :
=============

நிலவோ?... முகிலோ?... நிலம்விழும் பனியோ?...
மலரோ?... மதுவோ?... மகரயாழ் இசையோ?...
நான்முகன் காக்கும் நாரணன் கண்ணெதிர்
வான்புவி தோன்றி மறைந்தவன் ஒளியோ?...
மாசறு குணத்தினில் வானவர்க் கப்பால்...

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 1:34 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1425

மேலே