பகுத்தறிவும், கற்ற கல்வியும்
'சமையல் செய்வதெப்படி '?
என்றுவரும் புத்தங்கள்
பல புரட்டி சமையல்
செய்து பார்த்தும் - செய்த
சமையலில் சுவையில்லை
ஏட்டுப்படிப்பு வாசனை
என்பது ஏதுமில்லா
பாட்டியின் சமையல்
சுவையிலும் மணத்திலும்
தரும் நள பாகம்- என்னை
சிறு சிந்தனையில் ஆழ்த்தியது
பள்ளியிலோ, கல்லூரியிலோ
பெரும் கல்வி வெறும்
'கற்ற கல்வியே' ஆகும்
பகுத்தறிவின்றி இந்த கல்வி
தருவதில்லையே ஏதும் பயனே
வெறும் பகுத்தறிவில்
சாதனையாளராய் பலர்
இருந்து சென்றார் ,ஆயின்
வெறும் 'கற்ற கல்வியில்'யாரும்
சாதனையாளராய் வந்தது தெரியாது
'ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது'
என்ற பழமொழியும் இதனை
வலியுறுத்தி நிற்க ,என் மனதில்
தோன்றியது ஒரு வினா
அதுதான், 'ஆயிரம் ஆயிரம்
என்று பள்ளிகளும் ,
பல்கலை கழகங்களும்
முளைத்திருந்தும் இந்நாளில்,
நம் நாட்டில் இந்த படிப்பால்
'சாதனைப் புரிந்தோர்'என்று
கூறும்படி உயர்ந்தோர் எண்ணிக்கை
விரல்விட்டு என்னும் அளவில் கூட
உயராதது என்னை அயரவைக்கிறது
'நாம் போதிக்கும் கல்வியில் ஏதோ
குறை என் கண்முன் தெரிகிறது .
கல்வியில் இல்லை, அதை
போதிக்கும் முறையில் ,அதை
போதிப்பவர் திறனில், இதை
இன்னும் ஒரு 'சம்மேளனம்' வைத்து
இதில் குறை , எது அதை தீர்க்கும் வழி
என்று செய்யாது வாளா இருக்கும்
அரசாங்கம், கல்வியாணையாளர்கள்
விழித்துக் கொள்ளட்டும் .........................
எத்தனைப் பேர் நாட்டில் கல்வி பெற்றார்கள்
எத்தனை சதவிகிதம் என்பதெல்லாம்
என்னை பொறுத்தவரை வெறும்
,புள்ளிவிவரமே' ,'எத்தனை சதவிகிதம்
பாங்கான கல்வியறிவு பெற்றார்' என்பது
நம் நாட்டின் உயர்வை உணர்த்தும் ........
'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது'
'கற்ற கல்வி, வெற்றுக் கல்வி'
பகுத்தறிவுடன் இணைந்து செயலாற்றாத போது