வீறுகொண்டு எழு

அவமானங்களால்
என்னை
அர்ச்சனை இடுங்கள்.
அக்னிப்பறவையாய்'
'நான் அவதரிக்க...

விமர்சனங்களால்
என்னை
வீழ்த்துங்கள்
என் விவேகத்தின்
வெளிப்பாடு தெரிய....

தோல்விகளைப்
பரிசளியுங்கள் !
என்
வெற்றியின்
விலாசத்தை அறிய ...

ஏளனம் செய்யுங்கள்
நான்,
வேங்கையாய்
வீறிட்டு எழ ......

என்
பாதையில்
முட்களை தூவுங்கள்.
முனைப்புடன் - நான்
முன்னேறிச் செல்ல ....

வலிகளை
வழக்கமாக்குங்கள் .
வாழ்வின் வல்லமை
அறிய ......

எழுதியவர் : (31-Jan-18, 12:14 pm)
Tanglish : veerukondu elu
பார்வை : 728

மேலே