தனிமையையும் சுவாசி....

.##தனிமையையும்_சுவாசி...

தனிமை....தனிமை....
நா ரொம்ப தனிமையா இருக்கேன் யாருமே என்கூட இல்லை...வேணும்னா வராங்க
மத்தநேரத்துல பேசுறதில்லை...யார்டையும்
நல்லா சகஜமா பேசி பழக விடாமலே வீட்ல
வளத்துட்டாங்க..நா இவ்ளோ பெரியவனா
ஆனபின்னும் பணம் காசு வீடு வண்டி இருந்தாலும் தனிமையாவே இருக்க மாதிரி இருக்கு...பாசமா இருந்தவங்க இப்போ இல்ல....நல்லா பழகுநாங்க எவ்ளோ நம்புனேன் ஆனா எனக்கு ஏமாற்றமும் தனிமையுமே மிச்சம்....மனசுவிட்டு பேச ஆளில்லை....எப்பவுமே தனியா இருக்கமாதிரி தோனுது....எத்தனையோ நபர்கள் கூட இருந்தாலும் நெருக்கமானவங்க கொடுத்த தனிமைதான்
ஞாபகத்துக்கு வருது....இந்த Lonely தனிமையை எப்டி கடந்து அந்த சூழல்ல இருந்து மீண்டு வருவது....???
இப்படி இருக்கு அப்டினு கேட்கும் நினைக்கும் சில பல பெண்களுக்கும்
ஆண்களுக்கும் பொதுவாகவே
ஒரு யோசனை.....தனிமையையும் பயன்படுத்துவது...நாம் தனிமைக்கே
ஒரு துணையை உருவாக்குவதென்பது
எப்படி..???

இப்படியான ஒரு சூழலில் இருக்கும் சகோதர சகோதரிகளே....பொதுவாக
ஆண்களோ/பெண்களோ தானே எடுத்துக்கொண்ட தனிமையை யோசிக்கவோ..புரிந்துகொள்ளவோ...
ஒருவித மன அமைதிக்காகவோ....
ஏதொரு தேவைக்காகவோ மட்டுமே
தனிமை தேடி விரும்புவார்கள்...
தனிமை விரும்பியாக இருப்பார்கள்...

அப்படி இல்லாது....மாறாக
தனிமையை நினைத்து...வெம்பி
அழுது...புலம்பி...ஏங்கி....நிம்மதியில்லாது...
சாப்பிடாமல்...யாரிடமும் மனம் விட்டு பேசாது....எதையோ நினைத்து நினைத்து
மனதோடு போட்டு குழப்பி....உடல் வருத்தி
மனம் வருத்தி....தனக்கும் நிம்மதியில்லாது...
சுற்றத்தையும் நட்பையும்...மறந்து சுகம் சந்தோஷங்களை மறந்து.....உதட்டளவில் சிரித்தும்....நடித்தும் வாழும் சகோதர...
சகோதிரிகளே....உறவுகளே....

தனிமையை எண்ணி வருந்தாதீர்கள்.....
பயபடாதீர்கள்....மனமுடைந்து போகாதீர்கள்..
யாருமேயில்லையென சிந்திக்காதீர்கள்....

#உங்களுக்கு
நீங்கள்
இருக்கும்வரை
நீங்கள் அனாதையோ
தனிமைவாசியோ இல்லை...

பொதுவாக தனிமை என்பது தீராத உடல் நோய் அல்ல..அது ஒருவகையான மனபித்து
அவ்வளவே...தனிமையிடத்திலிருந்து என்னால் மீண்டுவரமுடியாது இருக்கிறேன்
என்று சொல்வதும் ஒருவகையான முயலாமையும்
சோம்பேரித்தனமுமே....அவைகளை மறந்து உடைத்தெரிந்து...புதுவாழ்வில் புகுவோம்....

தனிமையின் பொழுதுகளில் இதுவே கதியென படுத்திருக்காது...எழுந்தமர்ந்து
முதலில் சுயசிந்தனை செய்யுங்கள் நமது நிலையையும்...தனிமையின் பெரும் துயரத்தினையும் ....அதன் வலியையும் உணர்ந்து.....சிந்தியுங்கள்......
உங்களின் தனிமை பொழுதுகளில்
புத்தகங்களை வாசித்து அறிவை பெருக்கி
நல்ல நண்பனின் நட்பை பெற்று
சிறப்பாக்குங்கள் உங்களது தனிமையை.....

சொல்லமுடியாத துயரம்...நிறைவேறாத ஆசை...ஏக்கங்கள் நிறைந்த பொழுது...மனதுக்கு நெருக்கமானவர்....
உயிருக்கு உயிரான யாவருடைய பிரிவு..இழப்பு....சண்டைகள்...
அழுகை...வெட்கம்...சொல்லாதுபோன காதல்
தொலைந்துபோன நாட்கள்...இப்படி யாவற்றையும் நினைத்து அழுது பொலம்பாமல்.....எழுத்தாக்கி எழுதுங்கள்...
கதை...கட்டுரை...கவிதை...காவியமென உருவாக்குங்கள்...சொட்டும் கண்ணீரையும்
பொக்கிஷமாய் சேமியுங்கள்.....எழுத்தால்
மன ஆறுதல் அடையுங்கள்...சோகங்களையும் செய்தியாக்குங்கள்..அனுபவத்தை பாடமாக்குங்கள்........

நன்றாக விளையாடுங்கள்…மனச ஒரு வட்டத்துக்குள்ள போட்டு அடைக்காம....
வண்ணத்துப்பூச்சியாய் வானம் தாண்டி சிறகடிக்க அனுமதியுங்கள்....உங்களுக்கு புடிச்ச பாட்டு கேளுங்க...சின்ன ஆசைகளை
நிறைவேற்றிக்கொண்டு ஆனந்தமாய்
ஒவ்வொரு பொழுதுகளையும் கொண்டாடுங்க.....எப்பவுமே மனச புத்துணர்வோட துருதுருவென வெச்சிக்கோங்க....

உங்களுடைய தனித்திறமை மீதான ஆர்வம்
விருப்பத்தினை தனிமையின் துனைகொண்டு...யாருடைய தொந்தரவுமில்லாது நன்றாக பழகி பயிற்சி
கொண்டு தனிமையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்....
எப்போதுமே பிசியாகவே உங்களை வைத்துக்கொள்ளுங்கள்...ஒரு இன்டிப்பெண்டென்டாக உங்களது மனதையும் உங்களையும் வைத்துக்கொள்ளுங்கள்...

எப்படியெல்லாம் உங்களது தனிமையை
பயன்படுத்திக்கொள்ளமுடியுமோ...பயன்படுத்திக்கொள்ளுங்கள்...நன்மைக்காகவும்
பிறருக்கு தொந்தரவு இல்லாவகையில் அமைத்துக்கொள்ளுங்கள்....தனிமையையும் சுவாசிக்க கற்றுக்கொள்ளுங்கள் ...

எப்போது தனிமைவரும் எப்படி பயன்படுத்தலாமென சிந்தியுங்கள் ...அந்த
தனிமை நேரத்திற்காக காத்திருங்கள்....
உங்களை தனிமை ஆட்கொள்ளும் அளவிற்கு விட்டுவிடாதீர்கள்...
உள்உணர்வுகளை தனிமையின் கீழ்
வீணடிக்காதீர்கள்.....

முடியாதென முயற்சி செய்யாது விட்டுவிடாதீர்கள்....
முடியுமென்பதே வாழ்வுதனில் மீட்சி...

..##சேகுவேரா சுகன்.....

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (31-Jan-18, 9:16 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 115

சிறந்த கட்டுரைகள்

மேலே