தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி13

" நாங்க உங்கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சோம். ஆனால், நீ இப்ப தான் எங்களுக்குக் கிடைச்சு இருக்க.மீண்டும் உன்ன இழக்க நாங்க தயாராக இல்ல. ",என்று நந்தினி சமாதானம் சொல்ல, அசோக் பேசாமல் அமைதியானான்.
சிவா எதுவும் பேசவில்லை. ஆனால் அசோக் அதீஃபாவை காண வேண்டும் என்று விரும்பினான். அதற்கான சமயம் அமைய வேண்டும் என்று காத்திருந்தான்.

அதீஃபாவுடன் கைபேசியில் பேசுவது மட்டும் தான் அசோக்கிற்கு தற்காலீக ஆறுதலாக இருந்தது. நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் கைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் அதீஃபா, " உனக்கு என்ன கிப்ட் வேண்டும்? ", என்று கேட்டாள்.
" நீ என்ன கிப்ட் கொடுத்தாலும் வாங்கி எனக்குப் பிடிக்கும்! ",என்றான் அசோக்.
" என்ன பிடிக்கும்னு கேட்டால், பிடித்ததைச் சொல்லனும். அதை விட்டுட்டு நீ என்ன கொடுத்தாலும் பிடிக்கும்னு சும்மா சீன் போடக் கூடாது. ", என்றாள் அதீஃபா.
" உத்தரவுங்க மேடம். ஆனால், என்ன கிப்ட் கேட்கிறதுனு தான் தெரியவில்லை. ", என்று அசோக் சொல்ல, " உங்கிட்ட கேட்டதுக்கு நானே வாங்கிக் கொடுக்கலாம். சரி. நாளைக்குப் பேசலாம். குட் நைட். ", என்று அழைப்பைத் துண்டித்தாள் அதீஃபா.
கண்களை மூடித் துயின்றான் அசோக். அதிகாலை நேரம் சேவல் கூப்பிட கண் விழித்தவன் தூக்கமில்லாமல் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருக்க, அந்நேரம் எதோ ஒரு கார் வந்து வீட்டின் அருகில் நிற்கக் கண்டான்.
காரின் முன்பக்கச் சீட்டில் இருந்து இறங்கியவர், பின் சீட்டு கதவைத் திறக்க, அதிலிருந்து இறங்கியவனைக் கண்ட அசோக் அதிர்ந்தான்.

பின் சீட்டிலிருந்து இறங்கியவனை முன்பு கைது செய்து கொண்டு போகும் போது தான் அசோக் தாக்கப்பட்டான்.
நினைவு வர அசோக் வேகமாக சென்று சிவாவை எழுப்பி, விடயத்தைச் சொல்ல, சிவாவும், அசோக்கும் உஷாரானார்கள்.

அந்த கார் சிறிது நேரம் அங்கே நின்றது. அதன் பின் கிளம்பிச் சென்றது.

சிவாவும், அசோக்கும் அந்தக் கார் நின்ற இடத்திற்கு வந்தார்கள்.
சிவா விசில் அடித்தான்.
பக்கத்துவிட்டு மணி ஓடிவந்தது.

" வித்தியாசமான வாடை எதாவது வருகிறதா? என்று பார். ",என்று சிவா சொல்ல,
மணி அந்த இடத்தைச் சுற்றி வந்து, அருகில் இருந்த குப்பை தொட்டியை
நோக்கிக் குரைத்தது.

வேகமாக அசோக்கும், சிவாவும் அந்தக் குப்பைத் தொட்டியைக் கிளறிப்
பார்த்ததில் சக்தி வாய்ந்த வெடிமருந்து இருந்தது.
அது வெடிக்க ஐந்து நிமிடம் தான் மீதமிருந்தது.

அசோக் அந்த வெடிமருந்தைச் செயலிழக்கச் செய்தான்.
கடிகாரத்தைப் பார்க்க நேரம் அதிகாலை நான்கு மணியாகி இருந்தது.
அக்கம் பக்கத்துவீடுகளில் ஆட்கள் எழுந்து நடமாடும் சப்தம் கேட்டது.

அந்த வெடிமருந்தை ஒரு தோல்பையில் எடுத்து வைத்துவிட்டு,
ஜெகனுக்கு அழைப்பு விடுத்தான் சிவா, தனது கைபேசியில்.

ஜெகன் தனது வாகனத்தில் வந்து சேர அவரிடம் வெடிமருந்தை ஒப்படைத்து அதை
சோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்ய அனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்தார்கள்.

அங்கு சிவாவும், அசோக்கும் அடுத்த என்ன செய்யலாமென்று யோசித்துக்
கொண்டிருந்தார்கள்.

" வீட்டைச் சுற்றி, வீட்டின் முன்புறம் மற்றும் ஊரின் முக்கிய இடங்களில்
சிசிடிவி கேமரா மாட்டி வைத்தாலென்ன? ",என்று அசோக் சொல்ல, அதுவும்
சரிதானென்று நண்பர்களின் உதவியின் மூலம் சிசிடிவி கேமராக்கள்
பொருத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக அன்றிரவு வந்தவனைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்று
சிவா நினைத்தான்.

அப்போது ஜெகனிடம் இருந்து கைபேசி அழைப்பு வந்தது.

" ஹலோ! சொல்லுங்க சார். "

" சிவா, நீங்க கொடுத்த வெடிமருந்தை பரிசோதனை செய்த போது அது சக்தி
வாய்ந்த வெடிமருந்து என்று தெரிய வந்துள்ளது.
ஒருவேளை அது வெடித்து இருந்தால் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் ஆரத்தில்
அமைத்த வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்தையும்
அழித்திருக்கும். "

" என்ன சொல்றீங்க சார்? "

" ஆம் சிவா. உங்க ஊரையே அழித்திருக்கும். "

" ஓகே சார். "

கைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தனையில் இருக்கும் போது, அசோக்கின்
கைபேசி ஒலித்தது.

" ஹலோ! "

" ஹலோ! அசோக் நான் மகேஷ் பேசுறேன். "

" சொல்லு மகேஷ். "

" நான் என் ஊருக்குக் கிளம்பி சென்று கொண்டிருக்கும் போது, அந்த
தீவிரவாதி ராம் என்பவனைப் பார்த்தேன். நீங்கள் கைது பண்ண அதே தீவிரவாதி
தான். ",என்று மேலும் விவரங்களைச் சொல்ல, அசோக் குறித்து வைத்துக்
கொண்டான்.

சிவாவிடம் சொல்ல, இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

அந்த ஏரியாவில் இரவுடிகள் அதிகமாக சுதந்திரமாக இருந்தார்கள்.

வாட்சாப்பில் மகேஷ் அனுப்பிய புகைப்படத்தை வைத்துக் கொண்டுத் தேடினார்கள்.
அங்காங்கு சிலரிடம் காட்டி விசாரித்தார்கள்.
கிடைத்த தகவல்களைக் கொண்டு அந்த இடத்தை நெருங்கினார்கள்.

இவர்களிருவரும் தன்னைத் தேடி வருகிறார்களென்ற சேதியைத் தெரிந்து கொண்ட
தீவிரவாதி ராம், அங்கிருந்து தப்பித்துச் செல்ல, அதற்கு உதவியாக தமிழக
முக்கிய மந்திரியின் வாகனம் வந்தது.

அந்த வாகனத்தில் ராம் இருப்பதைச் சிவா பார்த்துவிட்டான்.
ஆனால், அந்த வாகனம் போலீஸ் பாதுகாப்போடு சென்றது.
அதனால் எதுவும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.

வீட்டிற்கு வந்தார்கள். நந்தினியும், சித்ராவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

" காலையிலிருந்து எங்க போய் இருந்தீங்க ரெண்டு பேரும்? "

சித்ரா கேட்டாள்.

" ஒன்னும் இல்ல மா. சும்மா தான். அசோக்கோட நண்பன் மகேஷ் பார்க்கப் போயிருந்தோம். "

சிவா பதில் சொன்னான்.

நந்தினியும், சித்ராவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

" ஏன் சமந்தமில்லாமல் சிரிக்கிறீங்க? ",என்றான் அசோக்.

" ஒன்னுமில்லையே ",என்றாள் நந்தினி.

கஸ்தூரி அம்மாவும், சுப்புராஜும் வந்தார்கள்.

" அசோக், சிவா எல்லாரும் கை கழுவி விட்டு வாங்க. சாப்பிடலாம். ",என்று
கஸ்தூரி அம்மா சொல்ல, எல்லாரும் கை கழுவி விட்டு வந்து அமர்ந்தார்கள்.

உணவு பரிமாறப்பட்டது.
அனைவரும் உணவை ருசித்து சாப்பிட்டனர்.

" இன்னைக்கு என்னமா விசேஷம்? ரொம்ப ருசியான உணவு சமைத்திருக்கிறீங்க?
",என்று அசோக் கேட்டான்.

பின்னாடி யாரோ வருவதை அசோக்கால் உணர முடிந்தது.
திரும்பிப் பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அங்கு புன்னகை சிந்தியபடி நின்றிருந்தாள் அதீஃபா.

ஆச்சரியத்தில் அசோக்கின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன.

" ஹேய்! என்ன ஆச்சு? ஏன் அப்படி பார்க்கிறாய்? "

அதீஃபா கேட்டாள்.

" ஒன்றுமில்லை. அது வந்து.... ",என்று மென்று முழுங்கினான் அசோக்.

" அட! என்ன அண்ணா உங்க முகத்துலேயே அசடு வழியுதே!. ",என்று கல்லாய்த்தாள் சித்ரா.

" ஹேய்! சும்மா இரு. என் கொழுந்தனாரே வாயில் வார்த்தை வராமல்
தடுமாறுகிறார். நீ வேற கல்லாய்க்காத! ",என்று அசோக் பக்கம் பேசினாள்
நந்தினி.

அசோக் எழுந்து கை கழுவி விட்டு மாடிக்குச் சென்றான்.
சிவாவும் மாடிக்குச் சென்றான்.

" என்ன ஆச்சு தம்பி? உன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள்! நீ
பேசாமல் வந்துவிட்டாய்! ",என்றான் சிவா.

" அது ஒன்னுமில்லைங்க அண்ணே! நம்மைச் சுற்றி ஆபத்து சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அதீஃபாவும் அந்த ஆபத்தில் சிக்குவதற்கு வந்திட்டாள்! அதான்
பதற்றமாக உள்ளது. ",என்றான் அசோக்.

" ஏன்டா தம்பி அப்படி நினைக்கிற? அவ இங்க படிக்க தான் வந்திருக்கா. தமிழ்
இலக்கியத்தில் அவளுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது.
அதனால் ஒரு கல்லூரியில் சேர வேண்டும் என்று என்னிடம் கேட்டாள்.
நானும் அதற்கு ஏற்பாடு செய்தேன். அதான் வந்திருக்கிறாள். உனக்கு
இதெல்லாம் தெரிய வேண்டாமென்று கேட்டுக் கொண்டாள் உன்னை
ஆச்சரியப்படுத்துவதற்காக. ", என்று சிவா சொன்னான்.

அசோக் திரும்பிப் பார்த்தான்.
அதீஃபா நின்றிருந்தாள்.

" சாரி அசோக். உன்கிட்ட முதலிலேய சொல்லி இருக்கனும். "

" பரவாயில்லை பா. விடு. என் கோபம் பொயிருச்சு. "

அசோக் புன்னகைத்தான்.
எல்லாரும் மாடியில் அமர்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தார்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Feb-18, 12:44 am)
பார்வை : 178

மேலே