நண்பர்-நட்பு
பள்ளிப்பருவம் முதல்
அவ்விருவரும் கூடிக் குலாவி
கைக்கோர்த்து ஓடி ஆடி
உலாவிவந்த பிள்ளைகள்
பிள்ளைப் பருவ தோழர்கள்
இவ்விருவர்,
பருவம் எய்தியபின்னும்
அவர்கள் நட்பு தொடர்ந்து வளர்ந்தது
ஆம், அவளும், அவனும் நண்பர்கள்
ஆண்-பெண் நட்பு இதற்கு
அறியா பருவத்திலே வித்து !
பருவத்தில் இந்நட்பு இயற்கை அரவணைப்பில்
காதலாய் மலர்ந்தது , மலர்ந்து
கணவன் அவன், மனைவி இவள்
என்ற புதிய உறவை தந்தது
அதில் இருவரும் ஒருவருக்கு மற்றோருவர்
மதிப்பு தந்து தாம்பத்திய உறவிற்கே
பெரும் மதிப்பு தந்து வாழ்ந்துவர
இவர்கள் வாழ்வை பிணைப்பது யாவது
என்றால், பள்ளிப் பருவத்திலும்,பின்னர்
பருவமடைந்த பின்னும் இவர்கள்
கண்போல் போற்றி வளர்த்த நட்பா
இல்லை கணவன்-மனைவி உறவா
என்றால் , கூறிடலாம் அது
பாலில் வேறுபட்ட நண்பர்கள்
இவர்கள் வளர்த்து வரும் நட்பே
இன்றும் இவர்கள் நண்பர்கள் முதலில்
பின்னர்தான் கணவன்-மனைவி