மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 7

#மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௭

மறுநாள் மதியம் உணவு இடைவேளைக்கு பின்பு கார்த்திக் அவன் இருக்கையில் அமர்ந்திருந்தான்...
அந்த டிபன் பாக்ஸ்ஏ எடுத்து தரீங்களா என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்..மாலதிதான்..முதன் முறையாய் அவள் பேசியதை அவனால் நம்ப முடியவில்லை ...எடுத்து கொடுத்ததும் தேங்க்ஸ் என்றாள்..இவள் டிபன் பாக்ஸ் எப்படி நம்ம இடத்துக்கு வந்தது என்று யோசித்தபடி பரவாயில்லை என்றான்..

அவனின் மன ஓட்டத்தை படித்தது போல அத நாந்தான் அங்க வைச்சேன்..தேங்க்ஸ் சொன்னது இதுக்கு இல்லை..நேற்று எனக்கு பணிச்மெண்ட் கொடுக்கத்துக்கு ...ஒருவேளை நீ அப்படி பன்னலான எனக்கு இன்னும் அவமானமா இருந்துருக்கும் என்று தலை குனிந்தாள் .
அவள் தோழியான பின்பு தான் மட்டும் தனித்து தெரிந்தான்...கார்த்திக் அடிக்கடி மாலதியிடம் பேசுவது நண்பர்களுக்கு கொஞ்சம் பொறாமை என்றாலும் காட்டி கொள்ளவது இல்லை..இப்படியே ஸ்கூலின் கடைசி அத்தியாயமும் நெருங்கியது ....

அன்று விளையாட்டு வகுப்பு ஒவ்வொருத்தராக விளையாட்டு திடலுக்கு போக மாலதி அருகில் வந்து,இந்த வாரம் ஸ்கூல் டூர் போறாங்க நீ போறியா என்றாள்..
நீ போனால் நானும் வரேன் என்று கார்த்திக் சொன்னதும் ,சிரித்து விட்டு பெயர் கொடு என சொல்ல கார்த்திக் நண்பன் உத்தமன் பின்புறமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது..
டேய் என்னடா நடக்குது இவ்ளோ வருசத்துல நான் கூட அவ கிட்ட தனியா இப்படி சிரிச்சு பேசுனது இல்ல நீ என்னடானா ம்ம் ...வாத்தியார் க்கு தெரிஞ்சா அவ்ளோதான் பார்த்துகோ என எச்சரித்தான்...

அவள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்க நேரம் கைகூடி வந்திருந்தது.
ஸ்கூல் கடைசி நாள் கொடைக்கானல் செல்வதற்காக சுற்றுலா ஏற்பாடு ஆகிருந்தது.
கார்த்திக் ஒரு இருக்கையிலும் அதற்க்கு அடுத்த வலதுபுறம் அவள் தோழியும் அவளுமாய் இருக்கையை பகிர்ந்திருந்தனர்..
இரவின் ஆரம்பத்தில் பேருந்தின் இருக்கைகள் ஒவ்வொன்றாய் நிரம்பி கொண்டிருந்தது.
வானத்தில் நட்சத்திரங்கள் மட்டுமே மின்னிக்கொண்டிருந்தது.
நிலவோ அவனோடு அவனருகே அவன் போகும் இடமெல்லாம் கூடவே வந்து கொண்டிருந்தது அவளின் பெயரை சூட்டிக்கொண்டு..
கண்ணாடி பெட்டகத்தின் உள்ளே வைரத்தை வைத்து ஆள் அரவமற்ற அறையினிலே அவனையே காவலுக்கு வைத்தது போலிருந்தது அந்த பயணம்.
பேருந்து மெதுவாக தனது புதிய பயணத்தை துவக்கி இருந்தது.
பேருந்தின் விளக்குகள் கண் அயர்ந்து தூங்கும் வரை,ஒருவருக்கொருவரின் சந்தோசமான பேச்சு சப்தங்கள் எல்லோரையும் தூங்க விடாமல் செய்திருந்தது.
நித்திரையின் முடிவில் சூரிய கதிர்கள் கண்ணாடி வழியே ஊடுருவி விளக்குகள் இல்லாமலேயே பேருந்தை வெளிச்சமாக்கி இருந்தது.
எல்லோரும் பிரிந்து சென்று வைகையில் குளித்து விட்டு கொடைக்கானல் நோக்கி ஒன்றாய் விரைந்து கொண்டிருந்தனர்.
ஜில்லென்ற காற்று மெதுவாய் பேருந்தை ஆக்கிரமிக்க தொடங்கியது.
விரல்கள் தவில் தட்ட ஆரபித்தது.
கால்கள் இரண்டும் தானாகவே இருக்கையை நோக்கி மேலே உயர்ந்து கொண்டது.
பற்களின் கடம் வாசிப்பு அருகில் உள்ளோர்க்கு கேட்டு விடுமோ என்ற அச்சத்தில்,பற்களோடு பற்கள் சண்டையிடுவதை சமாதானம் செய்து கொண்டிருந்தான்..
ஒன்றுக்கு இரண்டாய் சட்டையை அணிந்து விட்டு திரும்பி பார்த்த போது...
மாலதியின் முகம் குளிரால் வெளறி போய் கார்த்திக்கையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் உதடுகள் குளிரின் தாக்கத்தால் துடித்து கொண்டிருந்தது.
இரண்டு விழிகளும் அன்று சொல்லாமல் விட்ட மௌனத்தின் குறியீடுகளை சொல்ல தவிப்பது போல இருந்தது..
கார்திக்கின் தங்கை சுபா அவனுக்காக புதிதாய் எடுத்து கொடுத்திருந்த ஸ்வெட்டரை எடுத்து அவள் பார்வை படும் படியாக இருக்கையின் ஓரத்தில் வைத்து விட்டு திரும்பி அவன் நண்பனிடம் பேசுவது போல பாசாங்கு செய்தான்..
இமைக்கும் நேரத்தில் அவளின் உடல்கள் ஸ்வெட்டர்க்குள் தஞ்சமடைந்திருந்தது.
பேருந்தில் அவள் மட்டும் பொம்மை போல அமைதியாக இருந்தாள்.
அவளின் முகத்தில் மருதானியால் பூசப்பட்ட வெட்கம் சிவந்து சிகப்பு ரோஜாகளை விட அழகாய் இருந்தது.
கொடைக்கானலின் சுற்றியடித்து விட்டு மீண்டும் திரும்ப அதே இரவுகளின் பின்பகுதியில் ஒருவரை ஒருவர் கடைசியாய் பார்த்து பிரியும் சந்தர்ப்பம்,
அந்த தமிழ் புத்தாண்டு இரவின் அமைதியை கல்லெறிந்து கொண்டிருந்தது.
அவள் இறங்கும் நிறுத்தம் வந்தது.
அவனும் இறங்கி கொண்டான்.
அவள் மனசு படபடப்பது அவனுக்கும் கேட்டது.
ஏனென்றால் அவன் நிறுத்தம் இன்னும் வரமாலேயே அவளோடு அந்த ஆந்தைகள் அலறும் சப்தங்களை கொண்ட நடு நிசியில் இறங்கி நின்றான்.
அவளின் கண்களை கடைசியாய் ஒருமுறை மிக அருகில் பார்த்தான்.
காந்த அலைகள் சலனமில்லாமல் ஒன்றையொன்று எதிர் திசையில் வெட்டி கொண்டிருந்தது.
அவனின் ஆடை அவளோடு சேர்ந்த மகிழ்சியில்,ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறினான்.
அவள் பேருந்து மறையும் வரை அதே இடத்தில் ஒற்றையாய் நின்று கொண்டிருந்தாள்.

கால சக்கரம் விதிகளோடு விளையாடி மூன்று வருடங்களை போக்கி இருந்தது. இன்றுதான் அவளை அது போல் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க நேரிட்டது.

அது ஒரு சுதந்திர தினம்.
பதினொன்றாம் வகுப்பில் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் கடையநல்லூரில் சேர்ந்திருந்தனர்.
இது நாள் வரையிலும் அவள் கார்த்திக்கின் விழிகளில் படாமேலேயே ஒரே ஊரில் படித்து கொண்டிருந்தனர்.
பேருந்தில்தான் போய் வருகின்றனர்.இவ்வளவு நாளாய் பாராமல் இன்று பஸ்ஸில் இருந்து இறங்கிய போது,எதிர்பாராத தருணத்தில் அவளின் விழிகளை அவனின் விழிகளில் மிக சமீபத்தில் கண்டான்.
சின்னதாய் ஒரு தடுமாற்றம்..
அதற்குள் நிலை குலைய செய்திருந்தது அந்த விழி அம்புகளின் வேகம்.
சற்று சுதாரித்து கொண்டு விலகி நின்றான்.அவனை கடகடவென கடந்து சென்றாள்.
அன்று இருளில் தவிக்க வைத்த விழிகள் இன்று வெளிச்சத்தில் மீட்டெடுத்ததை போல உணர்ந்தான்.
அவனை கடந்து சென்றவள் பள்ளிக்குள் போவதற்குள் ஏழெட்டு முறை பார்த்து விட்டு(ட்டு) சென்றாள்.
ஒரு சில நொடிகளில் ஏற்பட்ட இரசாயன மாற்றம் அவன் வாழ்க்கையை எதிர்காலத்தில் என்னென்ன மனச்சிதைவுக்கு ஆட்படுத்தும் என்று கனவில் கூட எதிர்பார்க்க மாட்டான்..
மீண்டு(ம்) சந்தித்தவர்களில் அவனுக்குள் காதல் மெழுகுவத்தி எரிய தொடங்கி விட்டது.
அவள் காதலை கொடுத்து அவனை அணைப்பாளா இல்லை கண்ணீரை கொடுத்து காதலை அணைப்பாளா..

காதல் நெருப்பு படரும்....

எழுதியவர் : சையது சேக் (7-Feb-18, 6:47 pm)
பார்வை : 208

மேலே