அன்பு தோழி

கூடி காக்கைகள் உண்ணவதை காணும் போது
உன் நியாபகம் மறுக்காமல் என் தொடுதிரையை
தொடும் உன் பேச்சு ( சாப்டியாடா ) .........

மின்சார கம்பியில் சிட்டு இனங்கள் செல்ல கொஞ்சலில்
உன் நியாபகம் என்னோடு பேசுவது ஆபத்து என தெரிந்தும்
விட்டு செல்லாமல் உடனிருந்த உன் நட்பின் தனித்துவம்

அக்கறை கொள்ளாத ஒரு அனாதை உயிராய் நான் இருந்த போது
தினம் ஒரு குறுந்செய்தி நீ அனுப்பி என் நலம் விசாரித்தது
தினம் என் விடியலுக்கு உறவுகளிடமும் கிடைக்காத உயரிய பரிசு ...

நாட்களும் நகர்ந்து நாளிதழை போல பறந்தன
முட்களும் நெஞ்சினில் வீழ்ந்தார் போல்
உன் சொற்களும் வீசப்பட்டு ஊமையானேன்
ஓரிரு காலம் .....

காலம் கூடியது என் வாட்டமும் ஓடியது
இதயம் உன்னை உள்ளே வைத்து மூடியது
இதயத்திற்குள் சிறைப்பட்ட உதிரம் நீ எனக்குள்
சுற்றி உலாவு
காயம் எனக்கானால் வெளியே வந்து நலம் வினாவு
என் ஆயுள் வரை பிரியா பிரிய சிநேகிதியே !!

எழுதியவர் : (8-Feb-18, 5:02 pm)
Tanglish : anbu thozhi
பார்வை : 251

மேலே