தூங்கா_மனம்

#தூங்கா_மனம்
தனது வயலில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றி கொண்டு இருந்தார்,அப்பாவு;போன,வருஷம் தான் ஒன்னும் இல்லாம போச்சு இந்த வருசமாச்சும் தண்ணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது ஒரு ஏக்கர் நிலத்தை தயார் படுத்தி கொண்டு இருந்தார்.போன வருஷம் காவிரி தண்ணியும் இல்ல,மழையும் இல்ல சொசைட்டில வாங்குன லோன் இன்னும் கட்டல,பொண்டாட்டி கிட்ட இருந்ததே ரெண்டு வளைய அதையும் கொண்டு போய் அடகு கடைல வச்சாச்சு வீட்டுக்கு போன அவ முகத்தை கூட பாக்க முடியல குற்ற உணர்ச்சி,தனது பிள்ளையின்(மகளின்) எக்ஸாம் பீஸ்,என மனது ஒரு குரங்கு போல தாவி கொண்டே இருந்தது.நிம்மதியாய் கஞ்சி குடிச்சி நாள் ஆச்சு,இந்த வருஷம் எல்லா பிரச்சனையும் தீர்வு கிடைக்கும்,என நம்பிக்கையில் தனது நிலத்தை தயார் செய்து கொண்டு இருந்தார்.அப்பாவு,வயசு 30 லிருந்து 40 குள்ளாக இருக்கும்,பொண்டாட்டி அம்புஜம் மாமன் பொண்ணு,அவளுக்கு சீதனமாக வந்தது தான் அந்த ஒரு ஏக்கர் நிலம்,அது,இல்லாமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது.என்று அவ்வப்போது நினைப்பார் அப்பாவு.ஒரே மகள் தேன் மொழி ,பக்கத்து டவுனில் இருக்கும் கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜில் பி.ஏ இங்கிலிஷ் படிக்கிறாள்.(கவர்மெண்ட் காலேஜ் என்பதால் எக்ஸாம் பீஸ் மட்டும் கட்டுனா போதும்) இந்த துணிவில் தான் அப்பாவு தன் மகளை காலேஜில் சேர்த்தார்.அப்புடி இப்புடினு ரெண்டு வருஷம் ஓடிட்டு,மக தலைக்கு ஓசிந்துடா அடுத்த வருஷம் கல்யாண கவலை வேற அப்பாவுக்கு(அப்பா),இந்த யோசனையில் இவ்வளவு பிளாஸ்டிக் பை நிலத்தில் எப்படி வந்தது என்பதை யோசிக்கல அப்பாவு,இந்த முறை கர்நாடகத்துல நல்ல மழை ,காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை என்பதை அப்பாவு டிவில செய்தி பாத்து தெரிஞ்சி வச்சி இருந்தார்.இந்த முறை எப்படியும் தண்ணீர் வரும்,என்ற நம்பிக்கையில் இருந்தார் அப்பாவு.நாம டெல்டா கடைமட நமக்குலாம் தண்ணி வராது, என்று சிலர் டீ கடையில் பேசும் போது அப்பாவுக்கு கோபம் தலைக்கேறும்,இருந்தாலும் நம்பிக்கையை விடவில்லை அப்பாவு,தனது 11வயசுலந்தே குடும்பத்திற்காக உழைத்தவர்.அந்தி சாயும் நேரமாயிற்று அப்பாவு,கரையேறினார்.தான் குடிப்பதற்காக வைத்திருந்த பாட்டில் நீரிலே கை, கால்,முகம் கழுவினார்,அப்போது,அங்கிருந்து ஒருவர் வேகமாக ஓடி வந்தார்,வந்தவர் பாட்டு அப்பாவுவின் நண்பர்,யோ,அப்பாவு சேதி தெரியுமா உனக்கு என்ன சேதி என்னாச்சு என்று பதட்டத்துடன் கேட்டார்,அப்பாவு;யோ இந்த வருஷமும் தண்ணி வராதான், மேட்டூர்ல அணைல உள்ள தண்ணிய சென்னை குடிநீர்க்காக எடுக்க போரங்கலாம், மீதி உள்ள தண்ணிய எதோ கோவில் திருவிழா அப்பதான் விடு வாங்கலாம்.என்னையா பண்றது அவ்ளோதான் இந்த வருஷமும்.பேசாம நிலத்தை வித்துற வேண்டியது தான் என்று வேதனையுடன் சொன்னார் பாட்டு. அப்பாவுக்கு,கண்கள் கலங்கின.செய்வதரியாது திகைத்து நின்றார்.பாட்டுவும் போய் விட்டார்.பிறகு, கண் கலங்கிய நிலையில் அப்பாவு அருகில் இருந்த மரத்தின் அருகில் தலைசாய்த்து அமர்ந்தார்.கண் மூடிஇருந்தாலும் சொசைட்டி கடன்,அடகு கடை,மக கல்யாணம் என அனைத்தும் கண் முன் ஓடின.பின்னர்,செய்வதறியாது அருகில்,கட்டப்பட்டு இருந்த மாட்டின் கயிறை எடுத்து மரத்தின் கிளைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்.அப்பாவு;மணி ஓடியது இருண்டது அப்பாவுவை(அப்பா) காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் வீதியில் வந்து தேடினர்.தேன் மொழி பாட்டுவின் வீட்டிற்கு சென்று விசாரித்தாள். அவன் அப்பவே கிளம்பிடானே நான் போய் பார்க்குறேன் என்று பாட்டு கிளம்பினார் அப்பாவுவை தேடி..நேரம் ஓடியது தேட சென்ற வரையும் காணோம்,பங்கஜமும்,தேன் மொழியும் பதறினர்.. பின்னர்,சிறுது நேரத்தில் பாட்டு ஓடோடி வந்தார், பாவி மொவன் என்ன வேல செஞ்சுட்டான், என கதறி அழுதார் பாட்டு.. உடனே,பங்கஜமும்,தேன் மொழியும் வயலை நோக்கி ஓடினர்.வயலை அடைந்த உடன் ஒரே கூட்டம்,கூட்டத்தின் மேலே மரத்தில் உருவம் தெரிந்தது, பங்கஜம் நிலை தெரியாதவளாய் கீழே விழுந்தாள். தேன் மொழி மனதை திட படுத்தி கொண்டு கூட்டத்தின் உள்ளே சென்றாள், மேலே அந்திரத்தில் தனது அப்பா(வு) என தெரிந்த உடன் அந்த கால்களை பற்றிக்கொண்டு அழுதாள்.அவளின் கண்ணீர் துளிகள் அப்பா(வு) வின் கால்களில் பட்டவுடன்,திடுக்கென்று எழுந்தார் அப்பா(வு) தனது தூக்கத்தில் இருந்து..எப்பொழுது உறங்கினார் என தெரிய வில்லை..தன்,கண்களின் வழியே கசிந்த கண்ணீரை துடைத்துவிட்டு,துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கிச்சென்றார்..

எழுதியவர் : முகம்மது முஃ பாரிஸ்.மு (9-Feb-18, 8:14 pm)
பார்வை : 151

மேலே