கல்லூரி

அறிவைத்தேடும்
பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
அலைகின்ற அறிவுக்கோவில்
சாதி மதம் துறந்த
சமத்துவுப்பூங்கா…

எங்கெங்கோ பிறந்து
மழை மேகக்கூட்டம் போல்
ஒன்றாகி நின்ற
எங்கள் சொர்கமும்
இதுதான்
எவ்வளவு துன்பமும்
எள்ளளவு ஆகும்…
நண்பனின் முகம் பார்க்க

ஆசிரியர் சொன்ன கதைகள்
அரண்டு போன பின்னே
நம் மேசைகள் ஒவ்வொன்றும்
நம் கதை சொல்ல
நகைத்துக்கொள்கிறது
அவ்வப்போது கரும்பலகை….
.
காலமெல்லாம் கடந்து போக
நான்காண்டு முடிவில்
எங்கள் இதயம் கணக்க
நட்புக்கினிய நண்பனையும்
மகிழ்ச்சி பொங்கிய
நான்கு வருடங்களையும்-விட்டு,

எடுத்துச்செல்கிறோம்
கைக்குட்டையில்
கண்ணீர்த்துளிகளை மட்டும்

எழுதியவர் : சந்தோஷ் (11-Feb-18, 12:25 pm)
Tanglish : kalluuri
பார்வை : 95

மேலே