உனக்காக என் பக்கங்கள்

உனக்காக என் பக்கங்கள்

எழுதி முடித்த பக்கங்களை
விட்டு விட்டு
எழுதாத பக்கங்களை
விட்டு வைக்கிறேன்
உனக்கான அத்தியாயம் எழுத !

யாரும் தந்து விடாத
தேடலை நீ தந்து போனாய்
தேன் மதுர சிரிப்பும்
தெவிட்டாத பேச்சும்
தேன்மொழியே உன்னையன்றி
யார் தந்துவிட முடியும் !

யாழிசை மீட்டும் யாழினியே
உன் நினைவுகள் தீண்டி போகையில்
என் இதயம் உறைகிறது !
உன் முகம் காண்கையில் மட்டும் ஏனோ
உருகி விடுகிறது !

என்னை கடந்து போவோர் எல்லாம்
ஏதேதோ பேசிக்கொண்டே
என்னை கடக்க !
என் நினைவுகளில் கல்லெரிந்து
விட்டு போகிறார்கள்
தேன் கூடாய் நான் சேர்த்து வைத்த
உன் ஞாபங்கள் தேனீக்களாய்
சிறகடிக்கிறது !

தினம் தினம் நானும்
புரட்டி தான் பார்க்கிறேன்
உனக்காக என் பக்கங்கள் !
✍️Samsu✍️

எழுதியவர் : Samsu (12-Feb-18, 9:27 am)
பார்வை : 164

மேலே