முதுமொழிக் காஞ்சி 25

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நிறையச் செய்யாக் குறைவினை பழியார். 5

- பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும் பழியார்.

'செய்யாததற்கு முன்பே அக்குறை வினையை' என்றும்,
'செய்வதற்கு முன் செய்த குறைவினையை என்றும் பிரதிபேதம் உண்டு.

பதவுரை:

நிறைய செய்யா - நிரம்பச் செய்து முடிக்காத, குறைவினை - குறைவினையை,
பழியார் – எவரும் பழித்துரையார்.

முழுவதும் செய்துமுடியாத குறைவேலையக் கண்டு எவரும் பழித்தல் செய்யார். அவ்வேலை பின்னும் திருத்தமெய்தி நன்கு முடிதல் கூடுமாதலால் அறிவுடையோர் பழியார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-18, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே