காதலர் தினம்

காதலர் தினம்
(14.02.18)


விழிகளின் புரிதலும்
மனதின் அனுமதியும்
சேர்ந்து கிடைத்தால்
முதல் வெற்றி அதுவே

முன்பின் தெரியா
இருவரை ஒன்றாய்
உடனே இனைப்பது
காதல் தான்

காதல் அனுபவம்
பெற்றவர் வாழ்வில்
மகிழ்ச்சிக்கு என்றும்
குறைவில்லை

அனுபவம் ஜெயித்தால்
வாழ்வின் உச்சிக்கு
போவது ஒன்றும்
சிரமமில்லை

புரிந்து கொண்டால்
எதுவும் சுலபம்
காதல் அதற்கு
அரிச்சுவடி

காதல் என்பது
மோசமுமில்லை
அதை ஒதுக்கி
வைத்து வாழ்வதற்கு

வாழ்வில் காதல்
கலந்து விட்டால்
எதையும் நாமும்
சாதிக்கலாம்

எல்லா மதங்களும்
வணங்கச் சொல்வது
கடவுள் என்னும்
ஒருவரைத்தான்

எல்லா மதவாதிகளும்
வெறுக்கச் சொல்வது
காதல் என்றும்
ஒன்றைத்தான்

காதல் என்பது
உடம்பால் அல்ல
உணர்வால் வருவது
அறிவீரே

காதல் தோல்வி
என்ற சொல்லை
இன்று முதல்
நாம் அகற்றிடுவோம்

வெளியில் சொல்லா
காதல் யாவும்
ஒருதலை காதல்
ஆகிவிடும்

மனதை திறந்து
அறிவை கொண்டு
பரஸ்பரம் காதலை
சொல்லிடுவோம்

அனைத்து காதலும்
ஜெயிக்க வேண்டும்
முடிந்த அளவு
உதவிடுவோம்

காதலை என்றும்
ஒதுக்காதீர்கள்
காதலுக்கு துரோகம்
செய்யாதீர்கள்

காதலர் தினத்தை
போற்றும் வகையில்
கவிதை ஒன்றை
நான் எழுதிவிட்டேன்

இதை படிக்கும்
நீங்கள் தாமதிக்காதீர்
உடனே காதல்
செய்திடுவீர்

காதல் வாழ்க
காதல் வாழ்க
என்றே நானும்
முடிக்கின்றேன்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (13-Feb-18, 11:08 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 751
மேலே