உனை நினைத்து

உன்னை நினைத்து நினைத்து நான்
என்னை மறந்து விடுகிறேன்💖
காலை எழுந்தவுடன் வாசல் கதவு
மறந்து அலமாரி கதவில் நுழைகிறேன்🙆
பற்பசை மறந்து தசைமருந்து பிதுக்கி பல் துலக்குகிறேன் 👼
உடல் சோப்பு மறந்து துணி சோப்பில்
உடல் தோய்க்கிறேன் 👼
என் கால் குழாய் மறந்து தங்கையின்
சுடிதார் கால்சராய் நுழைகிறேன்👼
கை கடிகாரம் கட்ட மறந்து வண்ண
கை வளையல் பூட்டிக் கொள்கிறேன்!
வருகைப் பதிவில் என் பெயர் போடாமல் உன் பெயர் எழுதுகிறேன்!
உனை நினைத்து எனை மறந்தேன்!
நான் யாரென நீயே சொல்லி விடு💖

எழுதியவர் : பாலமுருகன்பாபு (13-Feb-18, 11:33 am)
Tanglish : unaai ninaiththu
பார்வை : 441

மேலே