காதலர் தினம் - 18

காதலர்கள் காது அலர்களாக
மாறும் நாள்

செருப்பையும் வெறுப்பையும்
காட்டிய பூவை பூவைக் காட்டும் நாள்

காதலெனும் கடலில் குதித்தோருக்கு
முத்து கிடைக்கும் நாள்

பின்னால் சுற்றாதே போ என்றவள்
பின்னால் சுற்றி வை பூ
எனச் சொல்லும் நாள்

பூமணம் பூ மனதைக்
கொல்லும் நாள்

மனங்கள் விலங்கிட்டது
விளங்காமல் இருக்கும் நாள்

பள்ளியறை பள்ளியறையாய்ப்
பிறக்கும் நாள்

எழுதியவர் : குமார் (14-Feb-18, 9:07 am)
பார்வை : 196

மேலே