காதலரே காதலரே

கட்டிளம் காளைகளும்★,தன்னழகில்
தானே மன்மதன் என்போரும்,★
அறிவாற்றலில் சிறந்தோரும்,★
அன்பினை அள்ளி எடுக்க நினைத்தோரும், ★காதல் என்பது
இளமை கடத்த கிடைத்த வாய்ப்பு
என்றலைவோரும்,★ கட்டழகு கன்னி
களும் , ★தொட்டணைத்தால் தொலைத்து விடும் காதல் பக்தியரும்★,மணமுடிக்கும் முன் மனம் மட்டுமே இணைய நினைப்போரும்,★
காதல் என்ற வார்த்தை செய்ய ஓர்
ஆள் கிடைத்தால் போதும் என்று
தேடுவோரும், ★இன்னும் எத்தனையோ காரணங்கள் கண்ணில் மின்ன கால் கடுக்க காத்திருப்போரும் ★என இன்று காதலர் தினத்தை பயன்படுத்தி கொண்ட காதலரே ★★நற்றுணை
பெற்று, நல்லெண்ணம் கொண்டு
கொண்டவனை(ளை) கைவிடாமல்
கடைசி வரை வாழ்ந்து காதலை
வெறுப்போரையும் காதலிக்க வைப்பீரே★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (14-Feb-18, 9:10 pm)
பார்வை : 135

மேலே