காதல் பயணங்கள்
மனம்!
கனவுகள் சுமந்திடும்
ஓர் பை..!
அதில் தீர்ந்துவிட்ட
கனவாய் நீ!
அருகில் விளக்காய்
இருந்தாய்
வாழ்க்கை பயனத்தில்
இப்போது
தொலைவில் புள்ளியாய்...
எதிர் திசையில்
தொடர்கின்ற நடையில்
புள்ளியும் மறைந்துபோகும்
மறந்துபோகுமா?
வேலியிட்டு
மலர்களை சிறைபிடிக்கலாம்
மணத்தை..?