காதல்
மீன் போன்ற விழியிலே
தேன் போன்ற மொழியாலே
வான் போன்ற மதியாலே
என் வாழ்க்கை மாறியது உன் வரவாலே....
பகலுக்காக கதிரா
இரவுக்காக நிலவா
இணையாத இவர்கள்
காதல் உவமைக்காய் சரியா
நம் காதல் முளச்ச்சாச்சு
நம் இணைந்து பல நாள் ஆச்சு
எதற்காக பிரிவெனும் வீண்பேச்சு .....
எனக்காய் பிறந்தாயோ
உனையே இழந்தயோ
காலம் சொன்னால் பிரிவாயோ
இது நடந்தால் நான் காலம் ஆவேன் அறிவாயோ.....
அழகான மொழி எதுவென்றால்
அன்பே !. நீபேசும் மொழிதான் என்பேன்
கனிவான குரல் எதுவென்றால்
கவிதையே உன் குரல் ஓசை என்பேன் .....
பூங்காற்று குடை விரித்து
பனித்துளி உன்னை சூடாக்கியதோ
கோலம் போடும் உன் விரல்களுக்கு
தங்கம் நான் பூட்டும் தேதி எதுவோ........
முறையாய் பெண் கேட்டு
சிலையே உன்னை அழைத்து வர
உலகையே விலை பேசவா........
என் மார்போடு தோளோடு நீ சாயும்
ஒவ்வொரு நொடிக்காய் காற்றோடு அலைவேனடி
நீ கிடைக்கும் வரை ஓயாமல் திரிவேணடி ......
நீ சுவாசித்த மூச்சையெல்லாம்
காற்றோடு கலந்து விடாதே
உனக்கான காதலர்கள்
தொல்லை அதிகமாகி விடும்
பூட்டொன்று பூட்டி வளிக்கூண்டு வழியே
முகநூல் வழி கண்டு எனக்கனுப்பு பூங்கோடியே.....
நாம் சேரும் காலம் தொலைவாய் இருக்க
நம் கூட இன்று தொலைவாய் இருக்க
கூடும் காலம் பறவைகளின் கூடுபோல
ஒரு இடமாய் மாறும் காலம் என்றோ மைனாவே ......
என் காலம் இனி காத்திருப்பதும் உனக்காகவே
என் காதல் இனி காலம் எய்துவதும் உனக்காகவே ......