வருந்தும் காதல் ரோஜா

***** வருந்தும் காதல் ரோஜா*****
பெருமை கொள்கிறது - காதலர்களுக்கு இடையில்
முதலில் நாமொரு காரணமாக இருப்பதற்க்காக...!
சந்தோஷம் படுகிறது - காதலர்களுக்கு இடையில்
தினமும் நாமொரு உறவாக இருப்பதற்க்காக...!
வெட்க படுகிறது - காதலர்களின் பரஸ்பர
முத்தத்தின்போது அருகில் இருப்பதற்க்காக...!
வருத்த படுகிறது - முத்தத்தின்போது இருவரின் இதழுக்கு
ரோஜாவின் இதழ் இடையாக இருப்பதற்க்காக...!