தனிமையோடு பேசு

தனிமையோடு பேசு..!

கவிஞனுக்கு தனிமை
கற்பனையின் ஊற்று!

துறவிக்கு தனிமை
தவத்தின் வலிமை!

இராணுவ வீரனுக்கு தனிமை
தீரத்தின் அடையாளம்!

காதலில் தனிமை
அன்பின் உச்சகட்டம்!

நிலவின் தனிமை
பெண்மையின் தன்னம்பிக்கை!

ஆராய்ச்சிக்கு தனிமை
உலகுக்கு புதிய கண்டுபிடிப்பு!

தவிப்பதற்க்கு மட்டுமல்ல தோழனே
உலகில் நீ தனித்து தெரியவும்
தனிமை அவசியம்...
தனிமையோடு பேசு!

எழுதியவர் : யாழ்வேந்தன் (15-Feb-18, 5:49 pm)
Tanglish : thanimaiyodu pesu
பார்வை : 1813

மேலே