யதார்த்தம் –கங்கைமணி

உதிரும் நேரம் வரும்வரையில்,இலை
உயிரோடிருக்கும் மரக்கிளையில்.

மண்ணில் மழைத்துளி விழும்வரையில்,விதை
மடியாதிருக்கும் மண் மடியில்.

மலரும் மலரா நாள் வரையில்,தேன்
மறைந்தே சுரக்கும் இதழடியில் .

மாலை வேலை வரும்வரையில்,நிலா
மங்கிக்கிடக்கும் கதிரொளியில்.

கானக்குயில்கள் வரும்வரையில்,கானகம்
காத்துக்கிடக்கணும் அதன் திசையில்.

கோழை வீரம் பெரும்வரையில்,அவன்
கோவம் அடங்கணும் கொதிநிலையில்.

தாயை மதியா நாள் வரையில் ,உன்
தர்மப்பயனும் எதிர்விணையில்.

உடல் மண்ணில் அடங்கும் நாள்வரையில் ,நீ
அடங்கி போகணும் அதன் வழியில்.

வெற்றித்திலகம் இடும்வரையில்,நீ
முயன்றே தோற்க்கணும் மண்மடியில்.

பொறுமை என்பது உன்பொறுப்பு ,அதை
காத்தால் கிடைக்கும் பெரும் வாய்ப்பு.

வியர்வை பூக்கள் மலராது ,உன்
வெற்றிக்கனிகள் காய்க்காது.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (16-Feb-18, 4:10 pm)
பார்வை : 166

மேலே