மாெட்டுக்கள் நாளை மலருமா

ஆசையாய் ஓடி வந்து அப்பா என்று
கட்டி அனணத்து ஆயிரம் முத்தங்கள்
அள்ளித் தரும் சின்ன மாெட்டாென்று
மலராமலே கருகி விடுகிறது
அண்ணா என்று தாேளில் ஏறி
அன்பை தூவிய அழகான தேவதை
அசிங்கப்படுகிறாள் ஆளறியாமல்
கல்லூரி வயதிலே கண்கட்டிக் கடத்தி
காடுகளுக்குள்ளே காமுகர்
கற்பை பறித்து காெல்கிறார்
கன்னி அடையாத பாலகனையும்
பாசம் என்று வேசம் காட்டி
மாேசம் செய்கிறார்
உறவென்று பழகினால்
சீண்டுகிறார் உடலினை
அருவருப்பாய் இருக்கிறது அருகமர
முத்தம் காமத்தை சேர்ந்ததல்ல என்று
தங்க மீன்கள் சாென்ன வார்த்தை கூட
தரமிழந்து பாேகிறது சில மனிதரால்
வெறுப்பாயிருக்கிறது வெறி பிடித்த
மனிதரைக் காண
யாரை நம்புவது இங்கு
முட்களுக்குள்ளே மலரும் ராேஜா
எத்தனை அழகாகிறது பூத்த பின்னே
மாெட்டுக்கள் நாளை மலருமா
இல்லை
முள்ளே குத்தி விடுமா

எழுதியவர் : அபி றாெஸ்னி (17-Feb-18, 8:10 am)
பார்வை : 116

மேலே